2026 மே 06, புதன்கிழமை

வாழைச்சேனை விபத்தில் சிறுவன் பலி; 19 பேர் காயம்

Kogilavani   / 2013 ஏப்ரல் 20 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எஸ்.எம்.முர்ஷித்,தேவ அச்சுதன்

வாழைச்சேனை, கல்குடா சந்தியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் 7 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளனர்.

கொம்மாதுரை, கலுவான்கேணியிலிருந்து பாசிக்குடா நோக்கி சென்ற உழவு இயந்திரமொன்று கும்புறுமூலை பாசிக்குடா வீதயில் வைத்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் பயணித்த 20 பேரில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

இவ்விபத்தில், கொம்மாதுரை கலைவாணி வீதியை சேர்ந்த ஜெயசந்திரன் மிதுஷன் என்ற 7 வயது சிறுவனே உயிரிழந்துள்ளார்.

 கல்குடா பொலிஸார் உழவு இயந்திரத்தின் சாரதியை  கைதுசெய்துள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .