2025 மே 01, வியாழக்கிழமை

சுழல் காற்றினால் 3 வீடுகளின் கூரைகள் சேதம்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 12 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடிப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடிப் பகுதியில் வீசிய சுழல்காற்றினால் 3 வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன. 

நேற்று திங்கட்கிழமை   மாலை 5 மணியளவில் மழையுடன் கூடி  சுழல் காற்று வீசியதனால்; புதிய காத்தான்குடி முதியோர் இல்ல வீதியிலுள்ள 3  வீடுகளின் கூரைகளே  சேதமடைந்துள்ளன.  மேலும், இச்சுழல் காற்றினால் இப்பகுதியிலுள்ள வேலிகளும் சரிந்துள்ளதுடன், மரங்களும் முறிந்து விழுந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

புதிய காத்தான்குடிப் பகுதிக்குச் சென்ற கிராம அலுவலகர்  எம்.எம்.ஜரூப் கூரைகள் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டதுடன், இது தொடர்பில் காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கும் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .