2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மாகாண அமைச்சினால் 32 பேருக்கு நிரந்தர நியமனம்

Super User   / 2013 ஒக்டோபர் 07 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்


கிழக்கு மாகாண விவசாய, கால்நடை மற்றும் மீன்பிடி அமைச்சின் கீழ் தற்காலிக அடிப்படையில் கடமையாற்றிய உத்தியோகத்தர்களுக்கு இன்று திங்கட்கிழமை நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. 32 ஊழியர்களுக்கான நிரந்தர நியமனம் விவசாய, கால்நடை மற்றும் மீன்பிடி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் விவசாயப் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது கிழக்கு மாகாண அமைச்சர் நஸீர் அஹமத்தினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.

இதற்கமைய கால்நடை உற்பத்தி அபிவிருத்தி சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் 29 ஊழியர்களும் மற்றும் மீன்பிடித் திணைக்களத்தின் கீழ் வரும் 4 உத்தியோகத்தர்களும் இந்த நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மாகாண அமைச்சின் செயலாளர் கே.பத்மநாதன், கால்நடை உற்பத்தித் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் ரீ.கே. தவராஜன், மீன்பிடித் திணைக்கள மாவட்ட  பணிப்பாளர் எஸ்.சுதாகரன் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாண ஆளுநர் வழங்கிய விசேட அனுமதியின் பிரகாரம் இந்த நிரந்தர நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .