2026 மே 14, வியாழக்கிழமை

dd

காத்தான்குடியில் 46 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 11 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் இவ்வருடம் ஜனவரி மாதத்திலிருந்து  ஜுன் மாதம்வரை 46  டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி, டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

காத்தான்குடி முதலாம் குறிச்சி ஊர்வீதி, ஸாவிய்யா வீதி, உள்ளிட்ட பகுதிகளிலேயே  இந்த டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும் இப்பிரதேசங்களில் தற்போது டெங்கு பரவுவது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.  விழிப்புணர்வு நடவடிக்கைகளும்  மேற்கொள்ளப்பட்டுள்ளன.

டெங்கு நுளம்புகள் பரவாத வகையில் மருந்துகள் விசிறப்பட்டுள்ளதுடன்,  பொதுவிடங்களிலும் பாடசாலைகளிலும் துப்பரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவெனவும் அவர் கூறினார்.

டெங்கு பரிசோதனையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்களை வைத்திருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி, டாக்டர் யு.எல்.நசிர்தீன்  தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .