2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

மட்டு.மாவட்டத்தில் 600 ஏக்கரில் நிலக்கடலை செய்கை

Kogilavani   / 2013 ஜூலை 05 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

முதன்முறையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 600 ஏக்கரில் நிலக்கடலை செய்கை பண்ணப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக விவசாய பணிப்பாளர் பி.உகநாதன் தெரிவித்தார்.

இதன் உத்தியோபூர்வ அறுவடை நிகழ்வு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை செங்கலடி செயலகப் பிரிவிலுள்ள புத்தம்புரி கிராமத்தில் இடம்பெறவுள்ளது.

இங்கு 50 ஏக்கரில் நிலக்கடலை செய்கை பண்ணப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திவிநெகும திட்டத்தின்கீழ் நிலக்கடலை விதைகள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்திற்கென பிரதேச அபிவிருத்தி வங்கி, விவசாயிகளுக்கு உதவி வருவதாக மாவட்ட செயலக விவசாய பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .