Kogilavani / 2012 ஜனவரி 22 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜிப்ரான், ரி.லோஹித், எம்.சுக்ரி)
மட்டக்களப்பு, வெலிக்கந்தை, சேனபுர புனர்வாழ்வு நிலையங்களிலிருந்து முன்னாள் விடுதலைபுலிகள் இயக்க உருப்பினர்கள் 73 இன்று ஞாயிற்றுக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.
இதன்போது, 62 ஆண்களும் 11 பெண்களும் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்ட இவர்கள் தமது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் கடனுதவிகளும் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திரஸ்ரீ கஜதீரவின் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பிரதியமைச்சர் வி.முரளீதரன், சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகாரப் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, புனர்வாழ்வு ஆணையாளர் பிரதீப் கொடுப்பிலி, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் ஏ.திசாநாயக்க உட்பட சமய தலைவர்கள், உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
6 minute ago
22 minute ago
sutha Sunday, 22 January 2012 08:35 PM
இனியாவது அவர்களை வாழ விடுங்கள்.
Reply : 0 0
sutha Sunday, 22 January 2012 10:19 PM
மீதி போராளிகள் எப்ப ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
22 minute ago