2025 மே 08, வியாழக்கிழமை

'அதிக நிதி ஒதுக்கப்பட்ட மட்டக்களப்பும் அடங்கும்'

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

இலங்கையில் வாழ்வாதாரத் திட்டத்துக்காக  அதிக நிதி ஒதுக்கப்பட்ட  மாவட்டங்களில் இரண்டாவதாக  மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுவதாக அம்மாவட்ட திவிநெகும  பணிப்பாளர்  பி.குணரட்ணம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பெரிய உப்போடை கிராம அலுவலப் பிரிவு சமூர்த்திச் சங்கங்களின்  ஏற்பாட்டில்  பாடசாலை மாணவர்களுக்கு சீலாமுனை  சின்னையா கலாசார மண்டபத்தில்  நேற்று வியாழக்கிழமை சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இதன்போதே  அவர் மேற்கண்டவாறு கூறினார்.

2015ஆம் ஆண்டு  புகைத்தல் தினத்தையொட்டி சேமிக்கப்பட்ட  நிதியில் கூடுதலான  நிதியை  சேகரித்த பெரிய உப்போடைக் கிராம அலுவலக பிரிவுக்குட்பட்ட சமூர்த்திச் சங்கங்களுக்கு மண்முனை வடக்குப் பிரதேச செயலகத்தினால்,  80 சதவீத நிதி வழங்கப்பட்டது.  இந்நிதியின் மூலம் இச்சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'மட்டக்களப்பு மாவட்ட  மக்களின்  வாழ்வாதாரத்தை  மேம்படுத்தும் திட்டத்துக்காக  மானியமாக 65 மில்லியன் ரூபாய்  வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில்  50 மில்லியன் ரூபாய்  05 சதவீத குறைந்த வட்டி வீதத்தில் வழங்குவதற்கு   திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு  மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றது' என்றார்.

இந்த நிகழ்வில் அதிதிகளாக திவிநெகும திணைக்கள முகாமைத்துவ  பணிப்பாளர்  திருமதி கே .நிர்மலா இருதயபுரம் கிழக்கு  வலய வங்கி முகாமையாளர் குமுதினி, வலய  உதவியாளர் கே.குமணன்,  சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X