2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

'அதிக வட்டியால் வறியோரின் உழைப்பு சுரண்டப்படுகின்றது’

Kogilavani   / 2017 பெப்ரவரி 19 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

“அதிக வட்டியால், வறிய மக்களின் உழைப்புச் சுரண்டப்படுகின்றது” என, மட்டக்களப்பு மாவட்ட, வாழ்வின் எழுச்சித் திட்டப் பணிப்பாளர்
பி. குணரெட்ணம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேச செயலகத்தில் நேற்று (18) இடம்பெற்ற பிரதேச மகாசங்க நிர்வாகத் தெரிவுப் பொதுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“வறிய மக்கள், கடன் பெறுவதற்கு முன்னர், கடனுக்காக அறவிடப்படும் வட்டி வீதத்தினை முதலில் விசாரித்து அறிந்து கொண்டதன் பின்னரே, கடன் பெற வேண்டும்.

"குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கென உருவாக்கப்பட்ட வாழ்வின் எழுச்சி சமுதாய வங்கிகளிலிருந்து, 80 சதவீதமான பணத்தை, அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த வட்டி வீதத்தில் வழங்கி வருகின்றோம்.

"வருமானம் குறைந்த குடும்பத்தவர்கள், தமது சுயதொழிலுக்கென தற்பொழுது வாழ்வின் எழுச்சி சமுதாய வங்கிகளிலிருந்து 5 இலட்சம் ரூபாய் வரை கடனாகப் பெற முடியும்.

"இங்குள்ள இலாபம் பெறும் சில நிதி நிறுவனங்கள் பெரும்பாலும், கிராமப்புற மக்களை இலக்குவைத்தே தமது தொழிலைச் செய்து வருகின்றன” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X