2025 மே 10, சனிக்கிழமை

'அபிவிருத்திக்கு மக்கள் தொகை அத்தியாவசியம்'

Niroshini   / 2016 ஜனவரி 19 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சபேசன்

கல்வியை ஒழுக்கமுடன் கற்றால் வாழ்கையில் முன்னேறமுடியும். ஒழுக்கமில்லாதவன் எந்த பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றாலும், அவனை சமூகம் ஏற்காது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.

அம்பிளாந்துறை இந்து இளைஞர் மன்றம் நடத்திய பொங்கல்விழா அதன் தலைவர் மா.வதனரூபன் தலைமையில் அம்பிளாந்துறை ஶ்ரீ ஶ்ரீசித்திவினார் ஆலய முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதில் பிரதமஅதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

தற்போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் பிரதேசங்களில் பல ஒழுக்கசீர்கேடுகள்,
தற்கொலை சம்பவங்கள், வன்முறைகள் என செய்திகள் நாளாந்தம் வருவதை காணமுடிகின்றது. கடந்த கால யுத்தம் ஏற்பட்ட காலங்களில் இவ்வாறான சமூகசீர்கேடுகள் இடம்பெறவில்லை. தற்போது போர் மௌனித்த பின் திட்டமிட்டு போதைவஸ்து பாவனைகள், மதுபானை பாவனைகள் எமது பகுதிகளில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதனால், இளைஞர்கள் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி சுதந்திரமாக மதுபானப்பாவனைகளில் உள்வாங்கப்படுகின்றனர். இஇவற்றில் இருந்து விடுபட வேண்டுமானால் மாணவர்கள் அறநெறி பாடசாலைகளுக்கு கட்டாயமாக செல்ல வேண்டும். அறநெறி சார்ந்த கல்வியறிவால்தான் வாழ்கையில் முன்னேற முடியும்.

இன்று கிழக்கு மாகாணத்தில் தமிழ் மொழிமூலப் பாடசாலைகளில் முதலாம் வகுப்புக்கு சேர்கப்பட்ட
மாணவர்கள் தொகை கடந்த ஆண்டைவிடவும் பத்து வீதத்தால் வீழ்சியடைந்துள்ளதாக அறியமுடிகிறது.

 பாடசாலைகளிலும் அபிவிருத்தி வளப்பங்கீடுகள் ,மாணவர் தொகையை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது எதிர்காலத்தில் கிழக்குமாகாணத்தில் பல தமிழ் மொழி மூலப் பாடசாலைகள் மாணவர்கள்
சேரும் தொகை குறையுமானால் மூடப்படக்கூடிய நிலமை ஏற்படும்.

உள்ளூராட்சி தேர்தல் வட்டாரங்களை வகுக்கும்போதும் மக்கள் தொகை கருத்தில் கொள்ளப்பட்டதால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சில தனித்துவமான கிராமங்கள் அயல் கிராமங்களுடன் இணைக்கப்பட்டிருப்பதை நாம் அவதானிக்கலாம்.

எனவே, அபிவிருத்தி தேவையை தட்டிப்பெறவும் மக்கள் தொகை கட்டாயம் தேவை என்பதால் அனைத்து கிராம அமைப்புக்களும் அந்த அந்த ஊர்களில் பிறப்பு வீதம் அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறுவோமானால் வட,கிழக்கு தாயகம் தமிழர் அல்லாதவர்களின் ஆழுமைக்கு வருவதை தவிர்க்க முடியாது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X