Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2015 டிசெம்பர் 09 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராஜன் ஹரன்
தனியார் துறையினரோடு ஒப்பிடுகையில் அரச ஊழியர்களின் செயற்திறன் குறைவாகக் காணப்படுவதாலும் வரையறுக்கப்பட்டதும் நிருவாகக் கட்டுப்பாடுகள் அதிகமானதுமான கடமைகள் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாலும் ஒரு குறிப்பிட்ட மட்டத்துக்கு மேல் அவர்களால் செயற்படுவதற்கு அதிகாரம் அற்றவர்களாகக் காணப்படும் சூழலே அரச நிறுவனங்களில் இப்போது நிலவிக்கொண்டிருக்கிறது என ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தெரிவித்தார்.
சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின வைபவங்களின் தொடர்ச்சியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக நிகழ்வுகள் இன்று (09) காலை 9.00 மணிக்கு நடைபெற்றன.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
தனியார் துறையினரோடு ஒப்பிடுகையில் அரச ஊழியர்களின் செயற்திறன் குறைவாகக் காணப்படுவதாலும் வரையறுக்கப்பட்டதும் நிருவாகக் கட்டுப்பாடுகள் அதிகமானதுமான கடமைகள் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாலும் ஒரு குறிப்பிட்ட மட்டத்துக்கு மேல் அவர்களால் செயற்படுவதற்கு அதிகாரம் அற்றவர்களாகக் காணப்படும் சூழலே அரச நிறுவனங்களில் இப்போது நிலவிக்கொண்டிருக்கிறது
ஆனாலும், இவற்றை விளங்கிக்கொள்ளமுடியாத பொதுமக்களும் ஏனைய வெளித்தரப்பினரும் கையூட்டல் வழங்கியாவது தமது வேலைகளை விரைவாக முடித்துவிடவேண்டுமென எண்ணுகின்றனர்.
இதை ஒரு சந்தர்ப்பமாக அரச ஊழியர்கள் பயன்படுத்திக்கொள்ள எண்ணும்போதே இலஞ்சமும் ஊழலும் தோற்றம் பெறுகின்றன. அதுமட்டுமில்லாது ஒரு சில அரச ஊழியர்களின் இவ்வாறான செயற்பாடுகள் முழு நிறுவனத்தையும் பாதிக்கின்றன.
ஒருவர் தனது வருமானத்துக்கும் மீறிய செலவுகளைச் செய்யமுனையும்போது மேலதிக வருமானமொன்றுக்காகத் தனது கடமைகளைத் துஷ்பிரயோகம் செய்து ஊழல் கலாசாரத்துக்குள் நுழைந்துவிடுகின்றனர்.சட்ட நடவடிக்கைகளுக்கு முகங்கொடுத்து தொழிலிலிருந்து இடைநிறுத்தப்பட்டு அரச வரப்பிரசாதங்களை இழந்த சிலர் இன்று தாங்கள் வாழும் சமூகத்திலும் அங்கீகாரத்தை இழந்தவர்களாகக் காணப்படுகின்றனர் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
14 Jul 2025