Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Gopikrishna Kanagalingam / 2015 நவம்பர் 12 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
நாட்டின் நலனுக்காகவும் மக்களின் நலனுக்காகவும் அரசங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்தியதிகாரி ஏ.எல். அலாவுதீன் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஒருங்கிணைந்த சுகாதார திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள டெங்கொழிப்பு வேலைத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று வியாழக்கிழமை அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியரிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
டெங்கு நோய்த் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கத்தினால் பல வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கிராமங்களிலுள்ள சமூக நிறுவனங்களான கிராம அபிவிருத்தி சங்கம்,கிராமிய சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், சமூக சேவைகள் அமைப்பு என்பன ஒருங்கிணைந்து மக்களுக்கு டெங்கு நோய்த் தாக்கம், இதனை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்பன தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
பிரதேச செயலகம் மற்றும் உள்ளூராட்சி மன்றம் என்பன ஒன்றிணைந்து ஒருங்கிணைந்த சுகாதார மேம்பாட்டு அபிவிருத்தி வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினாலும் அதிகாரிகளினாலும் இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்கொண்டு செல்ல முடியாது. இதற்கு பொதுமக்களும் ஒத்துழைத்தால் தான் டெங்கொழிப்பு நடவடிக்கையினை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு இலகுவாக அமையும்.
தற்போது மழை காலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் நுளம்பு உருவாகாமல் தடுப்பதற்கு சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளுதல், அவற்றின் வதிவிடத்தை முற்று முழுதாக அழித்தல், வதிவிடத்தில் இனம்பெருகாது கட்டுப்படுத்தல் என்பன முக்கியமானது.
சுற்றுப்புறத்தில் தேங்கும் நீரை வெறுமைப்படுத்துதல் அல்லது நீர் தேங்கி உள்ள அத்தகைய இடங்களில் பூச்சிகொல்லி மருந்துகளைத் தெளித்தல், உயிரியற் கட்டுப்பாட்டுக் காரணிகளை இடல் போன்றன நுளம்புகளின் பெருக்கத்தைத் தடுக்கின்றது.
ஒரு வாரத்துக்கு ஒரு தடவையாவது சுற்றுப் புறச் சூழலை கண்காணிப்பதோடு வீதிகளிலோ பொது இடங்களிலோ பிறர் மூலம் சேர்க்கப்பட்ட டெங்கு நுளம்பு பெருகும் பொருட்களை நாமாக முன்வந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago