2025 மே 26, திங்கட்கிழமை

'ஆயுதப் போராட்டங்கள் சமாதான ஒப்பந்தங்களில் முடிந்த வரலாறுகள் உள்ளன'

Suganthini Ratnam   / 2017 மே 17 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஆயுதப் போராட்டங்கள் சமாதான ஒப்பந்தங்களில் முடிந்த வரலாறுகள் இருக்கின்றன. ஆனால், இலங்கையின் வரலாற்றில் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் சமாதான ஒப்பந்தத்தில்  முற்றுப்பெறாமல், முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்றுள்ளது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் வி.கமலதாஸ் தெரிவித்தார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'முப்பது வருடங்களாக இடம்பெற்ற போராட்டம் முள்ளிவாய்க்காலிலேயே  முற்றுப்பெற்றுள்ளது' என்றார்.  

'8 இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல, ஒரு இலட்சம் மக்கள் இந்தியாவில் அகதிகளாக இருக்க, சொந்த மண்ணில்; மீள்குடியேறியும் மீள்குடியேறாமலும் அகதிகளாகவும் கைம்பெண்களாகவும் தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள்.

மேலும், முன்னாள் போராளிகளைப் புறக்கணிக்காமல், அவர்களின் வாழ்வதாரம் மற்றும் அரசியல் நலன் என்பவற்றில் தமிழ் அரசியல் தலைவர்கள் அக்கறையுடன் செயற்பட வேண்டும். அவர்களையும் அரசியல் நடவடிக்கையில் உள்வாங்க வேண்டும்.

முன்னாள் போராளிகள் எங்களைப் பார்த்து ஏக்கத்துடன் கேள்வி கேட்கும் நிலைமையை நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம்.
மக்களுடைய வாக்குகளைப் பெற்று அரசியல் சிம்மாசனத்தில் இருக்கின்ற தமிழ் அரசியல் தலைவர்கள், மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயற்பட வேண்டும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X