2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

'இயற்கை வளங்களைப் பாதுகாத்து எதிர்காலச் சந்ததிக்கு கையளிக்க வேண்டிய கடப்பாடு உண்டு'

Suganthini Ratnam   / 2016 ஜூன் 02 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித், ஏ.எச்.ஏ.ஹுஸைன்

'எங்களுடைய மூதாதையர்கள் மிகவும் கரிசனையாகப் பேணிப் பாதுகாத்த இயற்கை வளங்களைப் பாதுகாத்து எதிர்காலச் சந்ததிக்கு கையளிக்க வேண்டிய கடப்பாடு எங்களுக்கு உண்டு.  இதனை உணர்ந்தவர்களாக நாம் இருக்க வேண்டும்' என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் யுனொப்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள 'விவசாயக் கண்காட்சியும் வியாபாரச் சந்தையும்' மட்டக்களப்பு, கல்லடிப்பாலச் சந்தை திறந்தவெளியில் புதன்கிழமை (01) ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம் என்ற வகையில் உலகளவில் நடைபெறுகின்ற மாநாடுகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களில் எல்லாம் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற உரத்த குரலில் சத்தமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், எமது நாட்டில் இயற்கையைப் பாதுகாப்பதில் பெரும் சவால்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்' என்றார்.
 
 


 
 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X