2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

'இலகுவில் தொழில் பெறும் உயர் கல்வியை மாணவர்கள் தெரிவுசெய்ய வேண்டும்'

Suganthini Ratnam   / 2017 மார்ச் 01 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

எந்தவொரு நாட்டிலும் அனைத்துப் பட்டதாரிகளுக்கும் அரசாங்கத்தால் வேலைவாய்ப்பை  வழங்கிவிட முடியாது. இலகுவில் தொழில் பெற்றுக் கொள்ளக்கூடிய உயர் கல்வியை மாணவர்கள் தெரிவுசெய்ய வேண்டும் என மட்டக்களப்பு கல்குடாக்; கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.குணலிங்கம் தெரிவித்தார்.

கோரகல்லிமடு ஸ்ரீரமண மகரிஷி வித்தியாலயத்தில்  செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'சமீப சில நாட்களாக மட்டக்களப்பு நகரில் பட்டதாரிகளால் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பில் தொழில் வழங்கக் கோரியுள்ள  சுமார் 1,500 பட்டதாரிகளில் 1,200 பேர் கலைப் பிரிவு பட்டதாரிகளாகவே இருப்பார்கள் என்று நான் கருதுகின்றேன்.

வேலைவாய்ப்புத் துறையில் தற்போது கலைப் பிரிவுப் பட்டதாரிகளுக்கு இருக்கின்ற கேள்வி மிகவும் குறைவானது.
அந்த வகையில், இவ்வாறான பட்டதாரிகள் ஆசிரியர்களாக அல்லது எழுதுவினைஞர்களாக மாத்திரமே செயற்பட முடியும் என்ற நிலையில் எங்களுடைய பட்டங்களும் படிப்பின் பெறுமதியும் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது.
அதற்காகவே அரசாங்கமும் கல்விக் கொள்கையில்  மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றது.

எமது மாணவர்கள்  தற்போதுள்ள தொழில் சந்தைக்கு ஏற்ற வகையில் கல்வித் துறையை தெரிவு செய்ய வேண்டும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X