2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இலவச சிங்கள, ஆங்கிலமொழி வகுப்பு

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 16 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபையின் ஏற்பாட்டில் இலவசமாக சிங்கள, ஆங்கிலமொழி வகுப்பு ஆரம்பிக்கப்படவுள்ளதாக அம்மாவட்டச் சிவில் பிரஜைகள் சபைத் தலைவர் வர்ணகுலசிங்கம் கமலதாஸ் தெரிவித்தார்.

இந்த இலவச வகுப்பு கிரான் பிரதேசத்தில்; எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் 4 மாதங்களைக் கொண்ட இப்பயிற்சியின் நிறைவில் அரசாங்க அங்கிகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இன ஐக்கியத்துக்கும்; அறிவாற்றல் விருத்திக்கும் மொழி அறிவு முக்கியம் என்பதால், இந்த சக மொழி வகுப்புகளை இலவசமாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X