Princiya Dixci / 2017 ஜனவரி 19 , மு.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஸ்.எம்.நூர்தீன்
தமிழ் மக்கள் பேரவையினால் கிழக்கு மாகாணம் தழுவிய வகையில் எதிர்வரும் சனிக்கிழமை (21) நடத்தப்படவிருந்த எழுக தமிழ் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக, தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான ரி.வசந்தராஜா, நேற்று (18) தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வியாழக்கிழமை (19) நடத்தப்படவுள்ள தைப்பொங்கல் விழாவையொட்டியும் எழுக தமிழ் நடைபெற திட்டமிட்ட 21ஆம் திகதியன்று கிழக்கு மாகாணத்தில் பதில் பாடசாலை நடைபெறவுள்ளதாலும் எழுக தமிழ் நிகழ்வை நாம் பிற்போட்டுள்ளோம்.
எழுக தமிழ் நிகழ்வு நடாத்தத் திட்டமிட்டுள்ள பாட்டாளி புரம் விளையாட்டு மைதானத்தை அண்மித்து பாடசாலைகள் இருப்பதாலும் அன்று பாடசாலை நாளாக உள்ளதாலும் சன நெரிசல் ஏற்படும் என்பதை கருத்திற் கொண்டு எழுக தமிழ் நிகழ்வை பிற்போட்டுள்ளோம்” என்றார்.
33 minute ago
33 minute ago
43 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
33 minute ago
43 minute ago
52 minute ago