2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

ஏறாவூர் நகர சந்தையை புனரமைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2016 மே 29 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொது வசதிகள் சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஏறாவூர் நகர சந்தைக் கட்டடத் தொகுதியை ஒரு மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதற்கான அடிக்கல்லை கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டிவைத்தார்.

இந்தச் சந்தையில் பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் பொருட்களை விற்பனை செய்வதிலும் கொள்வனவு செய்வதிலும் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்தச் சந்தைக் கட்டடம் உள்ளூராட்சி நிர்வாகத்தினரால் புனரமைக்கப்படவில்லை என்று முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து புனரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இங்கு கிழக்கு மாகாண முதலமைச்சர்  தெரிவிக்கையில், 'அபிவிருத்திகளை மக்களின் காலடிக்குக் கொண்டுசெல்வதே கிழக்கு மாகாண சபையின் நோக்கம் ஆகும்.

மேலும், சந்தை விற்பனையுடன் மட்டும் நின்று விடாது நவீன கட்டடத் தொகுதியில் பல்வேறு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் ஒரு பயிற்சிக் களமாகவும் உருவாக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்கள் மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்டவை. அந்த வகையில் மக்களின் வரிப்பணத்துடன் இயங்கும் இந்த உள்ளூராட்சி நிறுவனங்கள் மக்களது வரிப்பணத்தை மக்களது அபிவிருத்திக்கே முன்னுரிமை அளித்துச் செயற்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X