Suganthini Ratnam / 2016 ஜூன் 22 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, ஏறாவூர் வாவிக்கரையோரத்தை அழகுபடுத்துவதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் நிறைவு பெறும் என கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்பாளர் ஏ.அப்துல் நாஸர் தெரிவித்தார்.
இந்த வாவிக்கரை பொழுதுபோக்கிடத்தில் சுமார் 80 இலட்சம் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்ட கட்டட நிர்மாணப் பணி நிறைவடைந்துள்ளது. மேலும், முதலமைச்சரின் 40 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வாவிக்கரையோரத்தை அழகுபடுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் வாவிக்கரைப் பிரதேசம் சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்கிடமாக இருப்பதால், அதனை அழகுபடுத்த வேண்டிய தேவை கருதி; இதற்கு முக்கியத்துவம் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த வாவிக்கரை பொழுதுபோக்கிடம் திறந்துவைக்கப்படும்போது, ஏறாவூர் நகர சபையின் பராமரிப்பில் பொறுப்பேற்;கப்படும் என அச்சபைச் செயலாளர் எச்.எம்.எம்.ஹமீம் தெரிவித்தார்.

19 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago
4 hours ago