Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Niroshini / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கில் தமிழ், முஸ்லிம் சமூகம் ஒற்றுமையாக வாழும் நிலையைக் குழப்ப முயற்சிக்க வேண்டாம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
அமெரிக்க அரசின் 3.2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியால் அபிவிருத்தி செய்யப்படவிருக்கும் 8 பாடசாலைகள் தொடர்பில் இனரீதியான பார்வையில் கருத்துக்கள் பரிமாறப்படுவது கிழக்கில் தமிழ், முஸ்லிம் சமூகம் ஒற்றுமையாக வாழும் நிலையைக் குழப்புவதற்கும் நல்லாட்சியை கூறு போடவும் எடுக்கும் முயற்சியாகும்.
எனவே, இது பற்றிய உண்மைகளை வெளியிட வேண்டியது எனது கடமையாகும்.
அமெரிக்க அரசு 2007ஆம் ஆண்டு இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் மக்கள் தற்காலிகமாக ஒதுங்கும் இடங்களாகிய பாடசாலைகளை அவர்களைப் போஷிக்கும் வகையில் அடிப்படை வசதிகளைக் கொண்டதாக அமைக்கவேண்டும் என்ற அடிப்படையில் இத்திட்டத்தினை ஆரம்பித்தது.
இதன் முதல் கட்டமாக 2007ஆம் ஆண்டு 11 பாடசாலைகளும் இரண்டாவாது கட்டமாக 2012ஆம் ஆண்டின் முற்பகுதியில் 08 பாடசாலைகளும் அபிவிருத்தி செய்யப்பட்டன.
இவ்விருதிட்டங்களிலும் மொத்தமாக 19 பாடசாலைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் 11 தமிழ் பாடசாலைகளும் 08 முஸ்லிம் பாடசாலைகளும் உள்ளடக்கப்படுள்ளன.
தமிழ் பாடசாலைகளுக்கான மொத்த நிதி ஒதுக்கீடு 5.2 மில்லியன் டொலர்களாகும். முஸ்லிம் பாடசாலைகளுக்கான மொத்த நிதி ஒதுக்கீடு 3.4 மில்லியன் டொலர்களாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
4 hours ago
5 hours ago