Princiya Dixci / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ்
காணி அதிகாரம், பிரதேச செயலாளரிடம் உள்ளது. பிரதேச செயலாளர், 'அரச காணி' என அடையாளப்படுத்தி காணி வழங்கும் போது, மாவட்ட செயலகத்திலிருந்து எவரிடமிருந்து கடிதங்கள் வந்தாலும் எற்க வேண்டாமென, பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத் தீர்மானமாக எடுக்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், நேற்றைய தினம் கோரிக்கை விடுத்தார்.
செங்கலடி கறுத்தப் பாலத்துக்கு அருகில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட அரச காணியைத் தனியார் ஒருவர் தனக்குச் சொந்தமானது எனக் கூறுவதாக எழுந்த சர்ச்சைக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கோரி நின்றார்.
முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனின் காலத்தில், ஜெய்க்கா திட்டத்தின் கீழ், கரடியனாறுப் பகுதியில் 69 மில்லியன் ரூபாய் செலவில் நீர்த்தாங்கி கட்டப்பட்டுள்ளது. அந்த தாங்கி இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago