2025 மே 14, புதன்கிழமை

கடதாசி ஆலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Administrator   / 2015 செப்டெம்பர் 03 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களின் கடந்த இரண்டு மாத சம்பள நிலுவையிலுள்ள சம்பளத்தை வழங்குமாறு கோரி ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை கடதாசி ஆலை முன்னால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.
கடந்த மார்ச் மாதம் தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் ஓட்டமாவடி பாலத்துக்கு அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டே எங்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது.

மேலதிகாரிகளால் எங்களுக்கான சம்பளம் நிலுவை இல்லாமல் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தும் கடந்த ஜூலை மாத சம்பளம் இரண்டு தடவைகளில் 50 வீதம் வழங்கப்பட்டதுடன் ஓகஸ்ட் மாதத்துக்கான சம்பளம் வழங்கப்படவில்லை.

எங்களுக்கு தொடர்ச்சியாக சம்பளம் நிலுவை இல்லாமல் வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X