Princiya Dixci / 2017 ஜனவரி 22 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
“புதிய அரசியல் யாப்பில் கரையோர மாவட்டம் என்ற விடயத்தை உள்ளடக்கி , கரையோர மாவட்டத்தை உருவாக்காவிட்டால் இந்தப் பிரதி அமைச்சர் பதவியை தூக்கி எறிந்து விட்டு இந்த மண்ணுக்கு வந்து மக்களோ மக்களாக இருப்பேன்” என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் விளையாட்டத்துறைப் பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
கல்முனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட நற்பிட்டிமுனையில் திவிநெகும சமதாய அடிப்படை வங்கித் திறப்பு விழா, கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனி தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக் கலந்து கொண்டு வங்கியைத் திறந்து வைத்து உரையாற்றிய போதே பிரதி அமைச்சர் ஹரீஸ் இவ்வாறு தெரிவித்தார்.
கல்முனை பிரதேச செயலக திவிநெகும சிரேஷ்ட தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த விழாவில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் கௌரவ அதிதியாக் கலந்து கொண்டார்.அதிதிகளாக திவிநெகும மாவட்டப் பணிப்பாளர் சந்ரூவன் அனுருத்த, திவிநெகு மாவட்ட இணைப்பாளர் ஐ.அலியார் ஆகியோரும் சலந்து கொண்டனர்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் கல்முனை மாநர சபை உறுப்பினருமான யூ.எல்.தௌபீக்கின் வேண்டுகோளுக்கிணங்க பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் அயராத முயற்சியினால் இந்த வங்கி திறந்து வைக்கப்பட்டது.
இங்கு பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் மேலும் உரையாற்றுகையில்,
அரசாங்கம் அரசியல் யாப்பை மாற்றவேண்டும் புதிய சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று முற்பட்டுக் கொண்டிருக்கின்றது.இந்த அரசியல் மாற்றத்திலே முஸ்லிம் சமூகத்தினுடைய இருப்பைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக எமது கட்சியும்,தலைமையும் நாங்களும் போரடிக்கொண்டிருக்கின்றோம்.
இன்றைய அரசாங்கம் வடக்கு,கிழக்கு பிரச்சினைக்கு திர்வுகாண முற்படுகின்ற போது இங்கு வாழ்கின்ற தமிழ்.முஸ்லிம் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை அரசு முன்வைக்க வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். இதற்காக எமது தலைவர், அரசாகத்துடன் மிகவும் இறுக்கமாகப் போராடி வருகின்றார். அந்த அளவுக்கு எமது கட்சி வளர்ந்து பலத்துடன் இருக்கின்றது.
கடந்த கால யுத்தம் காரணமாக கிழக்கு மாகாணத்திலே மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் இந்த மக்களின் வாழ்வாதாரம் வாழ்க்ககைத் தரம் இன்னும் உயரவில்லை இவற்றுடன் தற்போது ஏற்பட்டுள்ள வரட்சி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை இன்றைய நல்லாட்சி அரசாங்கம் தீர்த்துவைக்க முன்வரவேண்டும்.
தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்களின் வாக்குகளினால்தான் இன்றைய நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி அமைக்க முடிந்தது. இந்த நல்லாட்சியிலே இந்த மக்களுக்கு அநீதிகள் இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது. இன்று மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு அரசாங்கம், நல்ல தீர்வுகளை முன்வைக்க வேண்டும்” என்றார்.
32 minute ago
32 minute ago
42 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
32 minute ago
42 minute ago
51 minute ago