2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'சிறுபான்மையின மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும்'

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 18 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

இந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மையின  மக்களுக்கு சிறந்த அரசியல் தீர்வு  கிடைக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் பட்சத்தில் முஸ்லிம் மக்களுக்கும் அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும். அப்போதே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுபீட்சமான அரசியல் சூழ்நிலை நிலவும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத்தொகுதி அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

கிராமியப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின்; சுமார் 11 இலட்சம் ரூபாய் நிதி  ஒதுக்கீட்டில் பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு, களுதாவளையில் செவ்வாய்க்கிழமை (17)  நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்று ஜனாதிபதியும் பிரதமரும் கூறி வருகின்றனர். அரசியல் தீர்வு கிடைக்கக்கூடிய சாத்தியக்கூறு காணப்படும் இச்சூழ்நிலையில்,  அதனைக் குழப்பும் வகையில் தமிழ் அரசியல்வாதிகள் செயற்படுகின்றனர்.

சுயநிர்ணய உரிமை, சமஷ்டி அதிகாரம், வடக்கு, கிழக்கு இணைப்பு என்று தமிழ் அரசியல்வாதிகளும் பல கருத்துகளைத் தெரிவித்து வருகின்றார்கள். அவ்வாறில்லாமல், முஸ்லிம் மற்றும் தமிழ்த் தலைவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒரே கருத்துப்பட ஒரே குரலில் அரசியல் தீர்வைப் பெற வேண்டும்' என்றார்.
 
 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X