Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 17 , மு.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நெல்லிக்காடுப் பகுதியில் வேறு மாவட்டங்களிலிருந்து சிவில் உடையில் வந்த சிலர், தம்மைப் பொலிஸார் எனக் கூறிக்கொண்டு வீடுகளில் தேடுதல் நடத்தியதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார்.
போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (15) நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின்போதே, அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, 'நெல்லிக்காடுப் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் எனது கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தின் வக்கியல பொலிஸ் நிலையத்திலிருந்து வருகை தந்ததாகக் அவர்கள் கூறிய போதிலும், அவர்களிடம் பொலிஸ் அடையாள அட்டைகள் இருக்கவில்லை என்றும்; பொதுமக்கள் தெரிவித்தனர்' என்றார்.
இந்த விடயம் தொடர்பில் மட்டக்களப்பு –அம்பாறை மாவட்டங்களுக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கு கொண்டு செல்வது எனவும் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago