2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

‘சட்டத்தை நிலைநாட்ட நல்லுறவு அவசியம்’

Kogilavani   / 2017 பெப்ரவரி 19 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -ஆர்.ஜெயஸ்ரீராம்

“சட்டத்ததையும் ஒழுங்கையும் நிலை நாட்டுவதென்றால், பொதுமக்களுடைய நல்லுறவு எம்முடன் பின்னிப்பிணைந்து காணப்படுதல் வேண்டும்” என்று, கிழக்கு மாகாணத்துக்கான சமூகப்பொலிஸ் ஒருங்கிணைப்பாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.அரசரெட்ணம் தெரிவித்தார்.

கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருங்காலிச்சோலை பேத்தாழை கிருஸ்ணா வித்தியாலயத்தில் சனிக்கிழமை (18) நடைபெற்ற பொலிஸ் நடமாடும் சேவையின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

"சட்டத்ததையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதென்றால், பொதுமக்களுடைய நல்லுறவு, எம்முடன் பின்னிப்பிணைந்து காணப்படுதல் வேண்டும். அப்படி இருந்தால்தான், குற்றத்தைக் கூடியளவு தடுக்கக் கூடியதாக இருக்கும். பொலிஸ் திணைக்களம், ஒரு முதன்மையான திணைக்களமாக இருப்பதற்கு, பொதுமக்களின் உறவு முக்கியமானதொன்றாக காணப்படுகிறது.

"மேலும், எதிர்கால சந்ததியினருக்கு உங்கள் தாய்த்திருநாடு என்ற எண்ணத்தை, மக்கள் மத்தியில் நிலைத்திருக்கச் செய்யவேண்டும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X