Suganthini Ratnam / 2016 ஜூன் 03 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.அஹமட் அனாம்
சந்தித்த இடத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் எதிர்பார்த்துக்கொண்டிருப்பது நீண்ட தூர அரசியல் பிரயாணத்துக்கு உகந்ததாக தெரியவில்லை என்று கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் செமட்ட செவண மாதிரிக் கிராம வீட்டுத்திட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை கோறளைப்பற்று கண்ணகிபுரம் கிராமத்தில் இடம்பெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'நல்லாட்சி அரசாங்கத்துக்கு செய்த உதவிகளின் பலாபலன்களை நாங்கள் தற்போது அனுபவிக்க ஆரம்பித்துள்ளோம். போராட்டத்தில் பாதிக்கப்பட்ட உங்களுக்கு இது ஒரு ஆறுதலாக இருக்கும் என நான் நம்புகின்றேன்' என்றார்.
கண்ணகிபுரத்தில் இவ்வீடமைப்பு திட்டத்தை கொண்டுவருவதற்கு அரும் பாடுபட்டவர் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், அப்பிரதேசத்தில் இவ்வாறான காணிகளை கண்டால் எதிர்காலத்தில் இன்னும் பல வீட்டுத்திட்டங்களை ஆரம்பிப்பார்.
சிறுபான்மை சமூகத்தினுடைய நிகழ்ச்சி நிரல் தேசியமாக பூரணப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதனால் இந்த ஆட்சியாளர்களை நம்பக் கூடிய நிலைமை சிறுபான்மை அரசியல் தலைவர்களிடையே காணப்படுகின்றது' என்றார்.
'சந்தித்த இடத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது நீண்ட தூரம் அரசியல் பிரயாணத்துக்கு உகந்ததாக எங்களுக்கு தெரியவில்லை.
மனித நேயத்தோடு பேசுகின்ற பிரச்சினை தேசியத்தில் தயாராகிவிட்டால் என்றால் மாகாணத்திலும் மாவட்டத்திலும் அதிகம் பேசுகின்ற, செய்கிற அரசியல்வாதிகளாக, அதிகாரிகளாக தங்களை தாங்கள் மாற்றிக்கொள்ளாத வரை சிறுபான்மை இன மக்களுக்கு எந்த விமோசனத்தையும் பெற்றுக் கொள்ள முடியாது.
அரசியல் என்று வருகின்ற பொழுது தாங்கள் எதைப் பேசிக் கொண்டாலும், சண்டை பிடித்துக் கொண்டாலும் நியாயம் என்கிற வகையிலே உடன்பாடு தேவைப்பட வேண்டிய தேவைப்பாடு அரசியல்வாதிகளுக்கு இல்லாமல் இருக்கும் என்று சொன்னால் அது வெற்றி பெற்ற அரசியலாக எதிர்காலத்தில் பதிவு செய்து கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு விடும்.
நாங்கள் பணம் கொடுத்தோ, அரிசி கொடுத்தோ, மின்சார பட்டியல் கட்டியோ அரசியல் செய்பவர்கள் அல்ல. எங்களால் உங்களுக்கு செய்யக் கூடியதை, இதனைத்தான் செய்ய முடியும், எங்களது பாதுகாவலனாக, எல்லைக் காவலனாக, தங்களது கஷ்டத்தை பங்கெடுப்பவனாக இருப்போம் என்ற வேண்டுதலை தான் நாங்கள் தேர்தல் காலங்களின் உங்கள் மத்தியில் வைத்தோம்' எனவும் அவர் மேலும் கூறினார்.
26 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago