2025 மே 08, வியாழக்கிழமை

'த.தே.கூ.வை பலப்படுத்துவதன் மூலம் அரசியல் தீர்வை வென்றெடுக்க முடியும்'

Niroshini   / 2015 செப்டெம்பர் 13 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

வட,கிழக்கு வாழ் தமிழ் மக்கள் அனைவரும் தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவதன் மூலம் எமக்கான நீதியையும் அரசியல்தீர்வையும் வென்றெடுக்க முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

கொக்கட்டிச்சோலையில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

அரசியல் என்பது அபிவிருத்திகளை மட்டும் நோக்காகக் கொண்டு செயற்படும் பாடத்திட்டமல்ல ஒரு இனத்தின் விடுதலை மறுதலிக்கப்படும்போது அந்த உரிமைகளை வென்றெடுப்பதற்கு அவ்வினம் சார்ந்த மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுவதும் அரசியல்தான்.

இந்த மாத இறுதிக்குள் சர்வதேச அறிக்கையினை எதிபார்த்துக் கொண்டிருக்கின்றோம். சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமாகத்தான் இந்த நாட்டில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலைக்கான தீர்வு சாத்தியப்படும் என்ற நம்பிக்கையில் புலம்பெயர் தமிழர்களும் ஈழத்தமிழர்களும்  உலகத் தமிழர்களும் எதிர்பார்த்துள்ளனர்.

அரசாங்காத்தை திருப்திப்படுத்துவதாகவே உள்நாட்டுப் பொறிமுறையானது அமையுமே தவிர  பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எவ்வித நீதியும் கிடைக்கப் போவதில்லை.அதற்காகத்தான் சர்வதேச விசாரணை தேவை என்பது அனைவரினதும் விருப்பமும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X