2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'த.தே.கூ.வும் மு.கா.வும் அதிகாரப்பகிர்வை பெறவேண்டிய தேவை உள்ளது'

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 16 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்;லிம் காங்கிரசும் சேர்ந்து அதிகாரப் பகிர்வை பெறவேண்டிய தேவை இருக்கின்றது என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்; தெரிவித்தார்.
 
காத்தான்குடி நகர சபை மண்டபத்தில் நேற்று (15) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்
 
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முஸ்;லிம் காங்கிரசும் சேர்ந்து அதிகாரப் பகிர்வை பெறவேண்டிய தேவை இருக்கின்றது
 
அதேபோன்று தமிழ், முஸ்லிம் மக்கள் சரியான புரிந்துணர்வுடன் ஒவ்வொரு சமூகத்தினுடைய கௌரவமும் அந்தஸ்தும் பாதிக்காத வகையிலே பிரச்சினைகளை பேசித்தீர்ப்பதன் மூலமாக மாத்திரம் தான் உண்மையான நிரந்தரமான தீர்வை நாங்கள் அடையமுடியும்.
 
தமிழ், முஸ்லிம்கள் பிரிந்து நின்றால், நாம் எதனையும் சாதிக்க முடியாது. சிறுபான்மையினச் சமூகம் அராஜக ஆட்சியை ஒழித்து இந்த நல்லாட்சியை கொண்டு வந்தது இனப்பிரச்சினைக்கான தீர்வு வர வேண்டும் என்பதற்காகவேதான்.  அதனால் இனப்பிரச்சினைக்கான தீர்வு உடனடியாக வரவேண்டும். அதற்காக சிறுபான்மை சமூகம் ஜனாதிபதி மீதும் பிரதமர் மீதும் நம்பிக்கை வைத்துள்ளது.
 
இதில் தமிழ் முஸ்லிம் சமூகங்களாகிய நாங்கள் எந்த விட்டுக் கொடுப்பையும் செய்வதற்கு தயாரி;ல்லை' என்றார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X