2025 மே 12, திங்கட்கிழமை

'தீர்வுக்காக தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை'

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

'எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒன்றாகவிருந்து இதுவரையில் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. இவர்களுக்கிடையில் பேச்சுவார்த்தை  நடைபெறவில்லையாயின், இரண்டு சமூகங்களுக்கும் ஒன்றும் நடைபெற மாட்டாமாட்டாது' என கிராமிய பொருளாதாரப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற கலாசார மத்திய நிலையத் திறப்பு விழாவில் உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'கடந்த யுத்தம் காரணமாக தமிழ் மக்கள் அனைத்தையும் இழந்தனர். அவர்கள் மேலும் இழப்பதற்கு ஏதும் கிடையாது. எதிர்காலத்தில் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டிய தேவை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் உள்ளது. தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் என்று கோடு போட்டு பிரித்துப் பார்த்துச் செயற்பட்டால், நாம் சமூகத்தை ஏமாற்றுகின்றோம் என்பதற்கு மாற்றுக் கருத்து கிடையாது' என்றார்.  

'இன்னும் இனவாதம், மொழிவாதத்தை மூலதனமாகக் கொண்டு பேசிக்கொண்டிருப்போமாயின், மக்களை அதள பாதாளத்துக்கு இட்டுச் செல்லும்.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் சிறுபான்மை மக்களின் கலை, கலாசாரங்களை அமைச்சர்கள் நேரடியாக வந்து கண்டுகளிப்பதுடன், மக்களின் குறை நிறைகளையும் கேட்டறிகின்றனர்.

மேலும், பெரும்பான்மைச் சமூகத்தின் மத்தியில் தற்போது நல்லதொரு பார்வை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள  தமிழ்ச் சமூகத்துக்கு சிறுபான்மைச் சமூகங்களுக்கு உதவ வேண்டுமென்பதற்காக அமைச்சர்கள் இங்கு வருகின்றனர்.  ஆனால், கடந்த காலத்தில் இவ்வாறு நடைபெற்றதில்லை. இவை அனைத்தும் நல்லாட்சியின் மாற்றங்களாகும்' எனவும் அவர் மேலும் கூறினார்.

 
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X