2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

தங்கச்சங்கிலி அறுப்பு

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 17 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவில் ஜெயந்திபுரம் பாடசாலை வீதியில் நேற்று வியாழக்கிழமை இரவு குடும்பப் பெண் ஒருவரின் தங்கச்சங்கிலி அறுத்துச் செல்லப்பட்டுள்து.

 கணவனும் மனைவியும்  மோட்டார் சைக்கிளில் மட்டக்களப்பு நகரிலிருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சங்கிலியை அறுத்துச் சென்றதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தங்கச் சங்கிலி 48 ஆயிரம் ரூபாய் பெறுமதியானது என்றும் தலைக்கவசம் அணிந்தபடி வந்தவர்களே அறுத்துச் சென்றதாகவும் பொலிஸில் முறையிடப்பட்டுள்து. மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X