Suganthini Ratnam / 2017 ஜனவரி 19 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
தென்னிலங்கையில் இடம்பெறும் இனவாதாக் குழப்பத்தையும்; தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளுக்காக மேற்கொள்ளும் போராட்டங்களையும் இணைத்துப் பேசும் தமிழ்த் தலைமைகள் மட்டக்களப்பில் தமிழ் மக்கள் நடத்தும் போராட்டங்களில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை என தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
எதிர்வரும் 28ஆம் திகதி சனிக்கிழமை இந்த நிகழ்வினை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் மட்டக்களப்பு தாண்டவன்வெளியில் உள்ள கூட்டுறவு நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், 'எழுக தமிழ் என்பது மக்கள் எழுச்சி நிகழ்வு. இதனை நடத்துவதற்கு தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்தாலும் அல்லது வேறு யார் செய்தாலும் இன்று இந்த மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்கள் கொந்தளித்த நிலையில் உள்ளனர்.அதிர்ப்தியுடனும் விரக்தியுடனும் உள்ளனர்.
இந்த வருட ஆரம்பித்திலேயே மக்கள் வீதிக்கு வந்துவிட்டனர்.பாடசாலை மாணவர்கள் கூட வீதியோரத்தில் இருந்து ஆர்ப்பாட்டம் செய்யும் நிலையேற்பட்டுள்ளது.ஜனவரி 01ஆம்திகதி தொடக்கம் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் வீதியில் இறங்கி போராடும் நிலையுள்ளது.இவ்வாறான நிலையில் இவ்வாறான எழுச்சிப்பேரணிகளை மக்கள் மத்தியில் கொண்டுசெல்லும்போது அவர்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் கால்நடைகள் சுடப்படுகின்றது.களவாடப்படுகின்றது.இவ்வாறு பல பாதிப்புகளை எதிர்கொண்ட மக்களுக்கு ஆதரவு வழங்குவதாகவே இவ்வாறான எழுச்சிப்பேரணிகள் இருக்கின்றது.எழுக தமிழ் நிகழ்விற்கு எதிர்ப்பானது மக்கள் மத்தியில் இல்லை.
இன்று தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்றது.தமிழ் தேசிய கூட்டமைப்பில் தலைமை தாங்குபவர்கள் எல்லாம் அந்த ஆர்ப்பாட்டத்துக்கு சென்று ஆதரவு வழங்குகின்றார்கள்.மக்களை குழப்புகின்றனர் என்று கூறுபவர்கள் மக்கள் மேற்கொள்ளும் எந்த ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொள்ளக்கூடாது.
எழுக தமிழ் என்பதும் ஒரு வகையான ஆர்ப்பாட்டமே.ஒட்டுமொத்த தமிழர்கள் இணைந்து தமது பிரச்சினைகளை வெளிப்படுத்துகின்றனர்.இதில் தமிழ் மக்கள் பேரவை என்றோ தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றோ பார்க்கவேண்டிய அவசியம் இல்லை.
எழுக தமிழ் நிகழ்வினை எதிர்ப்பவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தி;ல் தமிழ் மக்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் செய்யும் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை.அதுவும் குழப்பும் செயற்பாடுகள் என்றுதானே அவர்கள் கருதவேண்டும்' என்றார்.
32 minute ago
32 minute ago
42 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
32 minute ago
42 minute ago
51 minute ago