Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Niroshini / 2015 செப்டெம்பர் 03 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் கி.மு.2ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நாகரசர்களின் கட்டுமானத்தில் உருவான கிணறு, நாகக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்புக்கு 29.08.2015 அன்று விஜயம் செய்த வரலாற்றுத்துறை பேராசிரியரும் யாழ்.பல்கலைக்கழக வேந்தருமான சி.பத்மநாதனும் தொல்லியல் ஆய்வுக்குழு உறுப்பினரும் ஆசிரியருமான வி.பத்மநாதனும் வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலய காணியினுள் மேற்கொண்ட மேலாய்வுகள் மூலம் கருங்கல் தூண்களினால் நிர்மாணிக்கப்பட்ட கிணறு கருங்கல்லில் செதுக்கப்பட்ட நாகக்கல் என்பன கண்டுபிடிக்கப்பட்டன.
இது பற்றி பேராசிரியர் தெரிவிக்கையில்,
இலங்கையின் பூர்வீக குடியினராக காணப்பட்ட தமிழர் மூதாதையரான ஆதி இரும்பு காலத்து பெருங்கற்கால பண்பாட்டு நாகவம்சத்தினர் தென்னிந்தியாவின் சோழமண்டல கடற்கரையிலுள்ள காவிரி பூம்பட்டிணம் போன்ற துறைமுகப்பட்டிணம் மூலமாக மட்டக்களப்பு தேசத்துக்கு கடல்வழி மார்க்கமாக குடியேறினர்.
இவ்வாறு கடல் வழிமார்க்கமாக வந்த ஆதி இரும்பு காலத்து பெருங்கற்கால பண்பாட்டு நாகவம்சத்தினர் ஆற்றுவழி,தரைவழி மார்க்கங்களாக தங்களது குடியேற்றங்களையும் குறுநில அரசுகளையும் நதிக்கரைக்கு அண்மையிலுள்ள உயர்வான இடங்களிலும் மலைச்சாரல்களிலும் காடுகளை எல்லைகளாக கொண்ட பிரதேசங்களிலும் வில்லு புல்நிலங்களிலும் வெட்டவெளி சமவெளி நிலங்களிலும் நிறுவினர்.
வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையாரடியில் நாகரால் நிறுவப்பட்ட குறுநில அரசானது கடல்வழி ஆற்று வழி தரை வழி என்பவற்றோடு தொடர்புடையதாகவும் காடுகளை எல்லையாகவும் சமவெளி நிலமாகவும் காணப்பட்டுள்ளது.
இங்கு கண்டுபிடிக்கபட்ட கிணரானது 3அடி பரப்பளவுடைய சதுரவடிவமும் 20அடி ஆழமுடைய கருங்கல் தூணினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.தூணின் வேள் நாகன் என்று தமிழ் பிராமி வரிவடிவம் காணப்படுகின்றது.
3அடி உயரமும் 2அடி அகலமுடைய நாகக்கல் காணப்படுகின்றது.இதில் மணி நாகன் என்று தமிழ் பிராமி வரிவடிவம் காணப்படுகின்றது.
கிணறுகள் மூலமாக நீரினை பெற்று பயன்படுத்தும் முறையும் தோட்ட பயிர் செய்கையும் இங்கு குடியேறிய நாகவம்சத்தினர் உருவாக்கினர்.
இவ்விடம் நாகர்களின் வழிபாட்டு தலமாக காணப்பட்டதோடு, கருங்கல் தூணினால் ஆலயத்தை அமைத்துள்ளனர் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
4 hours ago
5 hours ago