Suganthini Ratnam / 2017 ஜனவரி 16 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
இலங்கையின் நான்காவது இளைஞர் நாடாளுமன்றத்துக்கு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ஐந்தாவது பிரதிநிதியாக மட்ஃ சிசிலியா பெண்கள் கல்லூரியின் வர்த்தகப் பிரிவு மாணவி செல்வி சய்னுஜா இன்பநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நான்காவது இளைஞர் நாடாளுமன்றத்துக்கான ஆசன ஒதுக்கீட்டில் பாடசாலை மாணவத் தலைவர்களுக்காக மாகாண மட்டத்தில் 10 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. அந்த வகையில், கிழக்கு மாகாணத்துக்கான பாடசாலை மாணவத் தலைவர்களுக்கான பிரதிநிதித்துவமாக இந்த மாணவி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட நிலையில், போனஸ் ஆசனம் ஒன்று பெறப்பட்டு மாவட்டத்துக்கான ஆசனம் நான்காக காணப்பட்ட வேளை மேலதிக ஒரு ஆசனம் கிடைத்ததன் மூலம் மாவட்டத்தின் இளைஞர் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
40 minute ago
40 minute ago
50 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
40 minute ago
50 minute ago
59 minute ago