Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 நவம்பர் 24 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் எதிர்காலத்தில் நிலையானதொரு தீர்வை நோக்கிச் செல்ல வேண்டுமென்பதற்காக நிதனமாகச் செயற்பட வேண்டும். இருப்பினும், தங்களின்; இலக்கை அடையவிடக் கூடாதென்பதில் பல்வேறு வகையான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் அனுசரணையுடன் மத்தியமுகாம் பகுதியில் புனரமைக்கப்பட்ட விவசாய வீதியை பாவனைக்கு விடும் நிகழ்வு, திங்கட்கிழமை (23) மாலை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'இந்த நாட்டில் தமிழர்களாகிய நாம் ஆட்சித்துறையில் பங்குபற்றாமல் நீண்டகாலமாக விலகியிருந்தோம். ஆனால், அதனை மாற்றி எதிர்காலத்தில் நாங்களும் ஆட்சியாளர்களாக மாற வேண்டுமென்ற நிலையில், இதனொரு கட்டமாக இன்று கிழக்கு மாகாணசபையில் ஆட்சியாளர்களாகவும் மத்திய அரசாங்கத்தில் ஆட்சிக்கு அண்மித்த நிலையிலும் வரலாற்றில் இரண்டாவது தடவையாக எதிர்க்கட்சியாகவும் இருக்கிறோம்' என்றார்.
'தற்போதைய அரசாங்கம் தேசிய அரசாங்கமாக செயற்படுவதுடன், இதனுடைய பலாபலன்களை தமிழ் மக்கள் தொடர்ந்து அனுபவிக்க வேண்டுமென்பதில் மாத்திரம் நின்றுவிடாமல், கண்ணும் கருத்துமாக இருந்து செயற்படவேண்டும்.
மாகாண அமைச்சானது குறைந்தளவு நிதியுடன் இயங்குகின்றது. ஆனால், அந்த அமைச்சில் வேலை செய்யும் அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்படுவதினால், மக்களுக்கான வேலைத்திட்டங்களை கிடைக்கும் நிதியின் மூலம் சரியாக செய்ய முடிகின்றது.
மேலும், இந்த நாட்டில் ஜனவரி 08ஆம் திகதி தமிழ் மக்களால் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தின் காரணமாக த.தே.கூ. உறுப்பினர்கள், மாகாண அமைச்சு சார்ந்த விடயத்தில் முழுமனதுடன் வேலை செய்யக்கூடிய நிலை உருவாகியுள்ளதென்பதைக் இங்கு கூறவேண்டும்' என்றார்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன், விவசாய அமைச்சின் செயலாளர் கே.சிவநாதன், விவசாயத் திணைக்கள உயர் அதிகாரிகள், போதனாசிரியர்கள், விவசாயிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago