Suganthini Ratnam / 2017 ஜனவரி 22 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
நல்லாட்சியில் சுதந்திரம் இருந்தாலும், மக்களின் எதிர்பார்ப்பு முழுமையாக நிறைவேற்றப்படவில்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
நல்லாட்சியிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் திட்டமிட்ட குடியேற்றங்கள், காணி அபகரிப்புகள், திடீரென்று வணக்கஸ்தலங்கள் உருவாகும் செயற்பாடுகள் தொடர்ந்தவண்ணம் உள்ளதாகவும் அவர் கூறினார்
செங்கலடியில் சனிக்கிழமை (21) நடைபெற்ற பொங்கல் விழா மற்றும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது,'ஆட்சி மாற்றத்தின் மூலம் தமக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள், பாதுகாப்புத் தரப்பினரிடமுள்ள குடியிருப்புக் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும், முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதாரத் திட்டங்கள் ஏற்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்புடன் தமிழ் மக்கள் வாக்களித்தனர்.
நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு தற்போது இரண்டு வருடங்கள் கடந்துள்ளன. இந்நிலையில், தீர்வுத் திட்டங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நல்லாட்சி அரசாங்கம் காலத்தை வீணடிக்கும்போது, தென்னிலங்கையிலுள்ள இனவாத அமைப்புகளானது கொண்டுவரப்படவுள்ள தீர்வுத் திட்டத்தைக் குழப்பும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன' என்றார்.
'இந்த ஆட்சியில் சிறுபான்மையின மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
சிறுபான்மையின மக்களின் வாக்குகளினால் உருவாக்கப்பட்ட இந்த அரசாங்கமானது தீர்வுத் திட்டத்தை விரைவாக முன்வைக்க வேண்டும்.
தென்னிலங்கையில் மதவாத, இனவாத அமைப்புகளின் செயற்பாடுகள் அதிகரித்துக்கொண்டு வரும் நிலையில், இனிமேலும் காலத்தை இழுத்தடிக்காமல் இந்த வருட நடுப்பகுதியிலாவது சரியான தீர்வு வழங்கப்பட வேண்டும்' எனவும் அவர் கூறினார்.
32 minute ago
32 minute ago
42 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
32 minute ago
42 minute ago
51 minute ago