2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

'பாசிக்குடா கடற்கரையை சுத்தம் செய்வோம்'

Sudharshini   / 2016 ஜூன் 08 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

சர்வதேச சுற்றாடல் தினத்தையொட்டி மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் வழிகாட்டலில் கோறளைப்பற்று பிரதேச செயலகமும் கரையோரம் பேணல் திணைக்களமும் இணைந்து 'பாசிக்குடா கடற்கரையை சுத்தம் செய்வோம்' எனும் தொனிப் பொருளில் முழுநாள் வேலைத்திட்டம் ஒன்றினை திங்கட்கிழமை (06) மேற்கொண்டனர்.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், கரையோரம் பேணல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட திட்ட இணைப்பாளர் ஏ.கோகுலதீபன், உதவி பிரதேச செயலாளர் திருமதி நிருபா பிருந்தன், உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.சசிகுமார், கரையோரம் பேணல் திணைக்களத்தின் திட்ட உதவியாளர் எஸ்.ஏ.பைரூஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாசிக்குடா கடற்றையை சுத்தம் செய்யும் இந்நிகழ்வில், கோறளைப்பற்று பிரதேச செயலக ஊழியர்கள், கல்குடா பொலிஸார், கடற்படையினர், வாழைச்சேனை பிரதேச சபை ஊழியர்கள், சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள், கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X