Princiya Dixci / 2016 ஜூன் 08 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல், கே.எல்.ரி.யுதாஜித், எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட நான்கு பாடசாலைகளின் புனரமைப்பு மற்றும் நிர்மாணப் பணிகளுக்காக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் 27.65 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மட்டக்களப்பு பாவக்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலயம், கரையாக்கன்தீவு மகா வித்தியாலயம், காத்தான்குடி மில்லத் மகா வித்தியாலயம் மற்றும் மட்டு.பாலமுனை அஷ்ரப் வித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலைகளுக்கு இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இன்று புதன்கிழமை (08) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலே இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இப்பாடசாலைகளில் நிலவி வரும் இடவசதிப் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதையத்து, இத்திட்டத்துக்கான நிதியினை அவர் பெற்றுக் கொடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பாடசாலைகளில் குறைபாடுகள் நிலவுகின்றன. அவற்றினை நிவர்த்தி செய்து வைப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நான்கு பாடசாலைகளுக்குமான புனரமைப்பு நிர்மாணப் பணிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்கு முன்னர் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம் என இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
48 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
4 hours ago