Suganthini Ratnam / 2017 ஜனவரி 17 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
தமிழ் மக்களிடத்தில் அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரங்கள் இருந்தும் கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதுவிதமான பிரயோசனமும் கிடைக்கப்பெறவில்லை என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.
கொத்தியாபுல பிரதேச மக்களுக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று திங்கட்கிழமை கொத்தியாபுல பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்ற போது அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் 'யுத்தம் முடிவடைந்த பிற்பாடும் சிறுபான்மை மக்களுக்கெதிரான அடக்கு முறைகளுக்கான தீர்வொன்று கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிறுபான்மை மக்கள் ஒன்றிணைந்து ஆட்சி மாற்றம் ஒன்றினை ஏற்படுத்திய போதும் ஆட்சி மாற்றம் இடம்பெற்று இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் சிறுபான்மை மக்களுக்கான தீர்வுகள் எதுவும் இதுநாள்வரை கிடைக்கப்பெறவில்லை
கடந்த யுத்த காலங்களின் போது அதிகளவான எமது உறவுகள் இடம்பெயர்ந்திருந்தனர், இந்த நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்று இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் இதுவரை இத்தகைய இடம்பெயர்ந்த மக்களுக்கான மீள்குடியேற்ற நடவடிக்கைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை.
தமிழ் மக்களிடத்தில் அரசியல் அதிகாரம் மற்றும் நிருவாக அதிகாரம் போன்ற அனைத்து அதிகாரங்களும் உள்ள போதிலும் அந்த அதிகாரங்களினூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த வகையான பிரயோசனமும் கிடைக்கப்பெறவில்லை. சமூகம் சார்ந்த விடயங்களில் இவ்வாறான பின்தங்கிய பிரதேசங்கள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்ற ஒரு நிலையினையே நாம் காண முடிகின்றது.
இப்பிரதேசம் இன்று கல்வியில் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. நகர்புறங்களுடன் ஒப்பிடும் போது இத்தகைய பிரதேசத்தில் கல்வி கற்கக்கூடிய மாணவர்களுக்கு குறைவான வளங்களே கிடைக்கப்பெறுகின்றது. நகர்ப்புறங்களைப் போன்று பிரத்தியேக வகுப்புக்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்புக்களோ கல்விக்காக அதிக பணத்தினை செலவு செய்யக்கூடிய வசதிகளோ இத்தகைய பிரதேச மாணவர்களுக்கு மிகவும் குறைவாகும்,
எனவே இவ்வாறான பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளை வளப்படுத்த வேண்டிய ஒரு பொறுப்பு எமக்கு காணப்படுகின்றது. அந்த வகையில் இப்பிரதேச பாடசாலையில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக என்னால் முடியுமான முயற்சிகளை மேற்கொண்டு இப்பிரதேச பாடசாலைக்குரிய ஆரம்பப் பிரிவு ஆசிரியர் ஒருவரை பெற்றுத்தருவதற்கு உறுதியளிக்கின்றேன் என தெரிவித்தார்.
;.
33 minute ago
33 minute ago
43 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
33 minute ago
43 minute ago
52 minute ago