2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

'புதிய தொழிற்சாலைகள் அமைப்பதை அரசாங்கம் தவிர்க்கின்றது'

Suganthini Ratnam   / 2017 மார்ச் 27 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்


எதிர்காலத்தில் அரசியல் தீர்வு கிடைக்கும்போது, சகல வளங்களும் சிறுபான்மையின மக்களுக்கு கிடைத்துவிடும் என்ற காரணத்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புதிதாக தொழிற்சாலைகள் அமைப்பதை அரசாங்கம் தவிர்த்து வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

வாகரை, புளியங்கண்டலடி வீதிக்கான புனரமைப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை (26) மாலை ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணப்பட்ட பல தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டுள்ளன. ஆனால், இதுவரையில் எந்தத் தொழிற்சாலைகளும் புதிதாக அமைக்கப்படவில்லை. தற்போதும் இயங்கிக்கொண்டிருக்கும் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை  மூடுவதற்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது' என்றார்.  

'மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான மதுபானசாலைகள் காணப்படும் நிலையில், அவற்றைக் குறைப்பதற்கு எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 
கடந்த யுத்தத்தால் தமிழர்கள் அழிந்தார்கள். தற்போது மதுபானப் பாவனையால் அழித்துவிடுவோமோ என்று என்று சிந்திக்கின்றார்கள்' என்றார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X