2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

பிரார்த்தனை மற்றும் மரநடுகை நிகழ்வு

Niroshini   / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக அகதி முகாமில் தஞ்சமடைந்திருந்தவர்களில் காணாமல் போன 158 தமிழர்களின் 25ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பூஜை வழிபாடுகளுடன் உறவினர்களால் நினைவு கூரப்பட்டது.

1990ஆம் ஆண்டு செப்டெம்பெர் மாதம் 05ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பின் நிமித்தம் தஞ்சடைந்திருந்த வேளை  சுற்றி வளைப்புச் செய்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 158 தமிழ் இளைஞர்களை நினைவு கூர்ந்து பிரார்த்தனை நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதேவேளை,கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்களின் உறவினர்கள் தமது வீடுகளிலும் ஆயலங்களிலும் அனுஷ்டித்தனர்.

ஏறாவூர் 04 ஆம் குறிச்சி வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றதுடன் ஆலய வளவில்  தென்னை மரக் கன்றுகளும் நடப்பட்டன.

இதில் கிழக்கு பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு, சிரேஷ்ட ஆசிரியரும் கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாம் பொறுப்பாளருமான கலாநிதி ரீ.ஜயசிங்கம், மனித உரிமைச் செய்றபாட்டாளர்களான அமரா ஹப்புவாராச்சி, சரளா ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X