2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

போரதீவுப்பற்றில் பவுசர் மூலம் 16,000 லீற்றர் நீர் விநியோகம்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 03 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, போரதீவுப்பற்றுப் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் தினமும் 16,000 லீற்றர் நீர் பவுசர் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுவதாக  அப்பிரதேச சபை தெரிவித்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வரட்சியான காலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால், போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள வெல்லாவெளிக்குளம், கோவில் போரதீவுக்குளம், பெரிய போரதீவு பெரியகுளம், வட்டிக்குளம் ஆகியவற்றில் நீர் முற்றாக வற்றிக் காணப்படுகின்றன. மேலும், கடுக்காமுனைக்குளம், தும்பங்கேணிக்குளம் உள்ளிட்டவற்றில்  நீர்மட்டம் குறைவடைந்து காணப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X