Suganthini Ratnam / 2016 ஜூன் 06 , மு.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை காரணமாக தமிழ் மக்கள் ஒவ்வொரு விடயத்திலும் மிகக் கவனமாக கால்பதிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, பெரியகல்லாறு கடற்கரையில் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தால் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பூங்கா திறப்பு விழா, ஞாயிற்றுக்கிழமை (05) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'நியாயமான தீர்வை வழங்கி தங்களை நிம்மதியாக வாழ வைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் தமிழ் மக்கள் மாற்றத்துக்கு ஆதரவு வழங்கினார்கள்' என்றார்.
'மேலும், இந்த நாட்டை ஆட்சி செய்வது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியா, ஐக்கிய தேசியக் கட்சியா, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பா என்ற நிலைமை இருந்துவருகின்றது. ஆகவே, தமிழ் மக்கள் ஒவ்வொரு விடயத்திலும் மிகவும் கவனமாக கால்பதிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளனர்' என்றார்.
'கடந்த காலத்தில் எங்களால் எந்தவித அபிவிருத்திகளையும் செய்யமுடியாத நிலைமை இருந்தது. நாங்கள் இன்று எதிர்க்கட்சியில் இருந்தாலும், தற்போதைய ஆட்சிக்கு ஆதரவு வழங்கியவர்கள் என்ற அடிப்படையில் சில நடவடிக்கைகளுக்கு எங்களையும் உள்வாங்குகின்றனர். ஆனால், இது எந்தளவுக்கு தொடரும் என்பது கேள்விக்குறியாக உள்ளது' எனவும் அவர் மேலும் கூறினார்.
48 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
4 hours ago