2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மீன்வாடி தீக்கிரை

Suganthini Ratnam   / 2016 மே 24 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாசிக்குடாப் பகுதியிலுள்ள மீன்வாடி ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தீக்கிரையாகியுள்ளது.

இதன் காரணமாக குறித்த மீன்வாடியிலிருந்த சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் நாசமாகியுள்ளதாக பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த மீன்வாடியிலிருந்த மீனவர்கள் மீன்பிடிப்பதற்குச் சென்றபோதே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்துத் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மின் ஒழுக்கினால்  ஏற்பட்ட தீ விபத்தா அல்லது வாடியிலிருந்த எரிவாயு சிலிண்டரின் வெடிப்பினால் ஏற்பட்ட தீ விபத்தா அல்லது இந்த தீ விபத்துக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா என்ற கோணத்தில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X