2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

'முஸ்லிம் சமூகத்தின் காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை போராடிப்; பெறவேண்டிய சூழ்நிலை'

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 08 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

முஸ்லிம் சமூகத்தின் பூர்வீகக் காணிகளுக்கான  அனுமதிப்பத்திரங்களைக் கூட போராடிப்; பெற வேண்டிய சூழ்நிலை முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட்டுள்ளதுடன், இதற்கும் அரசியல் அதிகாரங்களைப் பிரயோகிக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது எனக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

கொள்வனவு செய்யப்பட்ட ஒருதொகுதி தளபாடங்களை ஏறாவூர் பசீர் சேகுதாவூத் வித்தியாலயத்துக்கு கையளிக்கும்; நிகழ்வு, செவ்வாய்க்கிழமை (7) மாலை நடைபெற்றது. அங்கு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'எமது பிரதேசத்தில் காணப்படும் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் இரட்டை வேடம் போடுவதையும்  அவற்றின் உண்மையை மறைத்துச் செயற்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது அதிகாரத்தின் ஊடாக இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை.

மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கும்  விடயத்தில் ஆர்வம் காட்ட வேண்டிய முதலமைச்சர்,  அரசியல்வாதிகளை பழிவாங்கும்  விடயத்தில் அக்கறை செலுத்தி வருகின்றார்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X