2025 மே 08, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் ஆரம்பக்கூட்டம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

 

திண்மக் கழிவைப் பயன்படுத்தி மின்வலு உற்பத்திக்கான செயற்திட்டத்தின் முதலாவது ஆரம்பக்கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

சிலோன் -ஜேர்மன் சர்வதேச லொஜிஸ்ரிக் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இத்திட்டம் குறித்த இக்கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், சிலோன் -ஜேர்மன் சர்வதேச லொஜிஸ்ரிக் நிறுவனத்தின் பணிப்பாளர், முகாமையாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது,திண்மக் கழிவகற்றலில் உள்ள பிரச்சினைகள்,திண்மக்கழிவுகள் மூலம் மின் மற்றும் எரிவாயு, மின்சாரம் உற்பத்தி செய்தல் குறித்து விளக்கமளிக்கப்பட்டன.

இதேநேரம், உள்ளூராட்சிச் சபைகளின் வேண்டுகோளுக்கிணங்க மாவட்டத்தில் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராயவென குழுவொன்று அரசாங்க அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளது.

இதில் மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர், உள்ளூராட்சிச் சபைகளின் பிரதிநிதிகள், வன பரிபாலனத்திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களங்களின் பிரதிநிதிகளும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இக்குழுவினரின் அறிக்கையையடுத்து இத்திட்டம் குறித்து மீண்டும் ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X