2025 மே 08, வியாழக்கிழமை

'மட்டக்களப்பில் ஐ.தே.க. வை பலப்படுத்த வேண்டும்'

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்த வேண்டுமென அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் வி.கே.லிங்கராசா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், 'இந்த மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும்' என்றார்.

'தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி தேசிய அரசை நிறுவியிருந்தாலும், இதில் பாரிய பங்கை ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுள்ளது.

இந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களும் ஏனைய ஆதரவாளர்களும் இம்மாவட்டத்தில் கட்சியை பலப்படுத்தி, கட்சியின் தனித்துவத்தை நிரூபித்து, எதிர்காலத்தில் அதிகாரங்களை கைப்பற்ற வேண்டும். இதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைவரும் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும்.

தற்போது நாட்டில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருக்கின்ற அதிகாரங்களை அனுபவிக்கின்ற பங்காளர்;களாக எங்களை மாற்றி அமைக்கின்ற அதேவேளை, அதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திகள், இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புக்களை உருவாக்கி அதன் மூலம் எமது மாவட்டத்தை அபிவிருத்தி அடைந்த மாவட்டமாக மாற்றியமைக்க முடியும்' எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X