2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

'மட்டக்களப்பிலேயே அதிகளவான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்'

Suganthini Ratnam   / 2017 மார்ச் 26 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகளவான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளன எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

இந்நிலையில், கிழக்கு மாகாணத்தில மட்டக்களப்பில் 33,608 பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் அம்பாறையில்  26,226 பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் திருகோணமலையில் 13,481 பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் உள்ளன.

வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் 27,765 பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் வவுனியாவில் 9,389 பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் கிளிநொச்சியில் 6,710 பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் மன்னாரில் 4,675 பெண் தலைமைத்துவக் குடும்பங்களும்  முல்லைத்தீவில் 4,529 பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் உள்ளன எனவும் அவர் கூறினார்.

பால்சேனைப் பிரதேசத்தில் சனிக்கிழமை (25)  மாலை நடைபெற்ற  நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது,'பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நல்லாட்சி அரசாங்கம் இதுவரையில்  எந்தவித  நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. எனவே, இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

இவ்வாறிருக்க, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னாள் போராளிகள் சுமார்; 11 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்கும் வாழ்வாதார வசதி மற்றும் தொழில் வாய்ப்பு என்பவற்றை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் எந்தவித திட்டங்களும் வகுப்படவில்லை' என்றார்.

'மேலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அதிகளவான அதிகாரங்களை வழங்கி அபிவிருத்திகளைச் செய்வதற்கான நடவடிக்கையை நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். நல்லிணக்கம் என்பது செயற்பாட்டில் இருக்க வேண்டும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X