2025 மே 12, திங்கட்கிழமை

'மத்தியஸ்த்த சபை உறுப்பினர்கள் பக்கசார்பின்றி கடமையாற்ற வேண்டும்'

Niroshini   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மத்தியஸ்த்த சபை உறுப்பினர்கள் நேர்மையாகவும் நீதியாகவும் பக்கசார்பின்றியும் கடமையாற்ற வேண்டும் என மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா தெரிவித்தார்.

காத்தான்குடி மத்தியஸ்த சபையின் வருடாந்த ஒன்று கூடல் நேற்று (14) மாலை காத்தான்குடி திறந்த கல்வி நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

காத்தான்குடி மத்தியஸ்த்த சபையின் தலைவர் எம்.ஐ.எம்.உசனார் தலைமையில் நடைபெற்ற இந்த ஒன்று கூடலில் தொடர்ந்துரையாற்றிய மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா,

மக்கள் மத்தியஸ்த்த சபை உறுப்பினர்களை நம்பி அவர்களின் பிரச்சினைகளை ஆற்றுப்படுத்த வரும் போது நேர்மையாகவும் பக்க சார்பின்றியும் நீதியாகவும் தீர்த்து வைக்க வேண்டும்.

நீதிமன்றங்களுக்கு சென்று எல்லோரும் வழக்குகளை கையாள முடியாது. சட்டத்தரணிகளுடாக வழக்குகளை கையாள வேண்டும். ஆனால் மத்தியஸ்த்த சபைகளில் அவ்வாறில்லை. மத்தியஸ்த்த சபைக்கு சென்று பிணக்குகளை முன் வைக்கும் போது அங்கு நேரம் பணம் என்பன விரயமாகாது.

குர்ஆனை படித்தால் சிறந்த முறையில் நீதியைச் செய்யலாம். குர் ஆனின் வழிகாட்டல் என்பது முக்கியமாகும். இஸ்லாமியர்களாக இருப்பவர்களில் எத்தனை பேர் இந்த குர்ஆனை சிறந்த முறையில் படிக்கின்றார்கள் என்பது தெரியாது.

குர் ஆன் சிறந்ததொரு வழிகாட்டியாகும். அதனை படிப்பதன் மூலம் சிறந்த நீதிச் செயற்பாட்டை செய்ய முடியும்.

இங்கு பெண் மத்தியஸ்த்தர்களை பார்க்கும் போது மகிழ்ச்சியளிக்கின்றது. பெண்களின் பிரச்சினைகளை பெண் மத்தியஸ்த்தர்கள் மூலம் ஆற்றுப்படுத்திக் கொள்ள முடியும்.

வாழைச்சேனை நீதிமன்றத்தை உருவாக்குவதற்காக நான் மிகவும் கடுமையாக உழைத்தேன். சவால்கள் நிறைந்த காலத்தில் இந்த வாழைச்சேனை நீதிமன்றத்தை உருவாக்கினோம். அந்த நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் கடமையாற்றி பல வழக்குகளை முடித்தேன்..

வாழைச்சேனை நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்ட போது, நீதிபதியாக நான் கடமையாற்றியதுடன் ஒரேயொரு காவலாலி மாத்திரம்தான் என்னுடன் இருந்தார்.

நான் மூதூரிலும் நீதிபதியாக கடமையாற்றியுள்ளேன். முஸ்லிம் பிரசேதங்களில் நீதிபதியாக கடமையாற்றியதால் முஸ்லிம்களைப் பற்றி நன்கு அறிவேன் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X