Suganthini Ratnam / 2016 ஜூன் 02 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மாவட்டத்தில் குறுமன்வெளி - துறையடி வரையான வீதி, களுவன்கேணி வீதி, மகிழவெட்டுவான் வீதி, தாந்தாமலை வீதி ஆகிய நான்கு வீதிகளும் கார்ப்பட் வீதிகளாக புனரமைக்கப்படவுள்ளன.
அடுத்த வருடம்; கிழக்கு மாகாணத்தின் வீதி அபிவிருத்தி, காணி மற்றும் காணி அபிவிருத்தி, மகளிர் விவகாரம், நீர் வழங்கல் அமைச்சால் நடைமுறைப்படுத்தப்படும் ஐ வீதித் திட்டத்தின் கீழ் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
கடந்த வருட மே மாதம் கிழக்கு மாகாண பிரதம செயலாளருக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்;.எம்.சார்ள்ஸினால் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பகுதிகளுக்கான வீதிகளை கார்ப்பட் வீதிகளை புனரமைப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவித்தன.
நான்கு கிலோமீற்றர் தூரமுடைய குறுமன்வெளி - துறையடி வீதியை புனரமைப்பதன் மூலம் குறுமன்வெளி, மண்டூர், எருவில், மகிழுர், தம்பலவத்தை, கணேசபுரம், சங்கர்புரம், காக்காச்சிவட்டை, வேத்துச்சேனை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன் அடைவர்.
மூன்று கிலோமீற்றர் தூரமுடைய களுவன்கேணி வீதியை புனரமைப்பதன் மூலம் களுவன்கேணி, வந்தாறுமூலை, பலாச்சோலை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன் அடைவர்.
மூன்று கிலோமீற்றர் தூரமுடைய மகிழவெட்டுவான் பிரதான வீதியை புனரமைப்பதன் மூலம் மகிழவெட்டுவான், விழாவெட்டுவான், கற்குடா, விழாந்தோட்டம், கரவெட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன் அடைவர்.
எட்டுக் கிலோமீற்றர் தூரமுடைய தாந்தாமலை வீதியைப் புனரமைப்பதன் மூலம் தாந்தாமலை, மாவடிமுன்மாரி, நாற்பதுவட்டை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன் அடைவர்.
17 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago