Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 மார்ச் 29 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
கோறளைப்பற்று வடக்குப் பிரதேசத்தில் சமுர்த்திக் கொடுப்பனவு பெறுபவர்கள் வடிசாராய உற்பத்தியில் ஈடுபடுவார்களாயின், அவர்களுக்கு வழங்கப்படும் சமுர்த்திக் கொடுப்பனவை தடைசெய்வதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என கிராமியப் பொருளாதாரப் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
கோறளைப்பற்று வடக்குப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அப்பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்றபோதே, இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
கோறளைப்பற்று வடக்குப் பிரதேசமானது 30 வருட யுத்தத்தில் பல இழப்புகளைச் சந்தித்தது. தற்போது இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் கட்டியெழுப்பப்பட்டு வரும் நிலையில், அவர்கள்; மதுபானப் பாவனைக்கு அடிமையாகி வருவதை காணக்கூடியதாக உள்ளது. ஆகவே, இங்கு வடிசாராய உற்பத்தியைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
கோறளைப்பற்று வடக்குப் பிரதேசத்தில் ஓமடியாமடு, ஊரியன்கட்டு, கட்டுமுறிவு ஆகிய கிராமங்களிலேயே அதிகளவாக வடிசாராய உற்பத்தி இடம்பெறுகின்றது. பல தடவைகள் வடிசாராயம் உற்பத்தி செய்யம் இடங்கள் பல தடவைகள் பொலிஸாரின் உதவியுடன் கிராம மட்ட அமைப்புகளினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. வடிசாராய உற்பத்தியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சிலருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது எனவும் அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago